சுங்க அதிகாரிகள் எடுத்துள்ள புதிய தீர்மானம்!

#SriLanka
Dhushanthini K
1 week ago
சுங்க அதிகாரிகள் எடுத்துள்ள புதிய தீர்மானம்!

சுங்க அதிகாரிகள் தமது கடமைகள் தொடர்பான நடவடிக்கைகளை மாத்திரம் முன்னெடுப்பதற்கு எடுத்த தீர்மானம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுங்க தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இன்று (13) பிற்பகல் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தும் போதே கூட்டமைப்பின் தலைவர்  அமில சஞ்சீவ இதனை தெரிவித்தார்.

அமைச்சர் விஜித ஹேரத் கடந்த 7ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு ஆய்வு மேற்கொண்ட போது கொள்கலன் கார் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் வழங்கிய பொய்யான கருத்துக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, தமது கடமைகள் தொடர்பான பணிகளை மாத்திரம் மேற்கொள்ள  நடவடிக்கை எடுத்துள்ளனர். 

இதனால், கண்டெய்னர்களை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டது. எவ்வாறாயினும், கொள்கலன் வாகனங்களை நிறுத்த வேண்டியதன் காரணமாக லொறி சாரதிகள் மற்றும் உதவியாளர்கள் வாக்களிக்க முடியாத காரணத்தினால் கடமை தொடர்பான நடவடிக்கைகளை மாத்திரம் மேற்கொள்ளும் தீர்மானம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

இந்தப் பிரச்சினைகளுக்கு எங்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வு கிடைக்கவில்லை. எனவே, நவம்பர் 12ஆம் திகதி நாங்கள் வழங்கிய அறிவுறுத்தல்களின்படி செயல்படுமாறு, வரும் திங்கட்கிழமை முதல், எங்களது உறுப்பினர்களுக்கு மீண்டும் அறிவிப்போம்" எனத் தெரிவித்துள்ளார். 


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!