வரலாற்றில் இன்று உலகில் என்னவெல்லாம் நடந்தது? நவம்பர் 14 (November 14)
கிரிகோரியன் ஆண்டின் 318 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 319 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 47 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1579 – "கிறித்தவ சமயப் போதனை" என்ற நூல் போர்த்துக்கீசிய யூதர் என்றிக்கே என்றிக்கசினால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.
1708 – கொழும்பு மதப்பள்ளி ஒல்லாந்தரினால் ஆரம்பிக்கப்பட்டது.
1751 – இரண்டாம் கர்நாடகப் போர்: பிரித்தானியா-பிரான்சுக்கிடையில் ஆற்காடு சண்டை முடிவுக்கு வந்தது.
1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் கூட்டமைப்பின் தலைநகர் ரிச்மண்டைக் கைப்பற்றும் இராணுவத் தளபதி அம்புரோசு பர்ன்சைடின் யோசனையை அங்கீகரித்தார்.
1886 – பிரீட்ரிக் சொன்னெக்கென் என்பவர் முதல்தடவையாக காகித துளை கருவியை வடிவமைத்தார்.
1889 – நெல்லி பிளை என்ற பெண் ஊடகவியலாளர் 80 நாட்களுக்குள் உலகைச் சுற்றி வரும் தனது திட்டத்தை 72 நாட்களுக்குள் வெற்றிகரமாக முடித்தார்.
1918 – செக்கோசிலோவாக்கியா குடியரசாகியது.
1922 – பிபிசி தனது வானொலி சேவையை ஐக்கிய இராச்சியத்தில் தொடக்கியது.
1940 – இரண்டாம் உலகப் போர்: இங்கிலாந்தில் கவெண்ட்ரி நகரம் செருமனியரின் குண்டுவீச்சில் பலத்த சேதமடைந்தது. கவெண்ட்ரி தேவாலயம் முற்றாக அழிந்தது.
1941 – இரண்டாம் உலகப் போர்: வானூர்தி தாங்கிக் கப்பல் ஆர்க் ரோயல் மூழ்கியது.
1941 – இரண்டாம் உலகப் போர்: பெலருசில் செருமனியப் படையினர் பர்பரோசா நடவடிக்கையில் ஈடுபட்டு ஒரே நாளில் 9,000 யூதர்களைக் கொன்றனர்.
1943 – இந்திய-இலங்கை விரைவுத் தொடருந்து சென்னையில் இருந்து 100 மைல் தூரத்தில் சேந்தனூர் என்ற இடத்தில் தடம் புரண்டதில் 30 பேர் வரை உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.
1963 – ஐசுலாந்து தீவின் அருகில் உள்ள சூர்ட்சி என்னும் தீவு வட அட்லாண்டிக் கடலில் எழுந்த எரிமலையால் புதிதாகத் தோன்றியது.
1965 – வியட்நாம் போர்: லா ட்ராங் என்ற இடத்தில் அமெரிக்கப் படைகளுக்கும் வடக்கு வியட்நாம் படைகளுக்கும் இடையில் பெரும் போர் வெடித்தது.
1967 – அமெரிக்க இயற்பியலாளர் தியோடோர் மைமான் உலகின் முதலாவது லேசருக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.
1969 – அப்பல்லோ திட்டம்: நாசாவின் அப்பல்லோ 12 விண்கலம் மூன்று விண்வெளி வீரர்களுடன் சந்திரனை நோக்கிச் சென்றது.
1970 – சோவியத் ஒன்றியம் பன்னாட்டு குடிசார் வான்பயண அமைப்பில் இணைந்தது.
1970 – மேற்கு வர்ஜீனியாவில் அமெரிக்க விமானம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் மார்சல் பல்கலைக்கழக காற்பந்தாட்ட அணியினர் உட்பட 75 பேர் உயிரிழந்தனர்.
1971 – மரைனர் 9 செவ்வாய் கோளை சென்றடைந்தது. இதுவே பூமியில் இருந்து வேறொரு கோளின் செயற்கைச் செய்மதியாகச் செயற்பட்ட முதலாவது விண்கலமாகும்.
1973 – கிரேக்க இராணுவ ஆட்சிக்கு (1667-74) எதிரான பெரும் ஆர்ப்பாட்டம் கிரேக்கத்தில் ஆரம்பமானது. 1975 – மேற்கு சகாராவை விட்டு எசுப்பானியா விலகியது.
1978 – பிரான்சு ஆப்ரோடைட்டு என்ற அணுவாயுத சோதனையை நிகழ்த்தியது.
1982 – போலந்தின் சொலிடாரிட்டி தொழிற்சங்கத் தலைவர் லேக் வலேசா 11 மாதங்கள் சிறையில் இருந்த பின்னர் விடுவிக்கப்பட்டார்.
1990 – கிழக்கு செருமனி மற்றும் மேற்கு செருமனிகளின் இணைப்பிற்குப் பின்னர் போலந்துக்கும் செருமனிக்கும் இடையிலான எல்லைகள் வரையறுக்கப்பட்டன.
1991 – நாடு கடந்த நிலையில் வாழ்ந்த கம்போடியாவின் இளவரசர் நொரடோம் சீயனூக் 13 ஆண்டுகளின் பின்னர் நோம் பென் திரும்பினார்.
1996 – டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
2001 – ஆப்கானித்தானின் தலைநகர் காபூலை ஆப்கான் வடக்குக் கூட்டணிப் படைகள் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தன.
2003 – 90377 செட்னா என்ற திரான்சு-நெப்டியூனிய வான்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
2016 – நியூசிலாந்தில் கைக்கோரா என்ற இடத்தில் 7.8 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் இருவர் உயிரிழந்தனர்.
பிறப்புகள்
1650 – மூன்றாம் வில்லியம், இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, அயர்லாந்து மன்னர் (இ. 1702)
1765 – ராபர்ட் ஃபுல்டன், நீராவிக் கப்பலைக் கண்டுபிடித்த அமெரிக்கப் பொறியியலாளர் (இ. 1815)
1840 – கிளாடு மோனெ, பிரான்சிய ஓவியர் (இ. 1926)
1889 – ஜவகர்லால் நேரு, இந்தியாவின் 1வது பிரதமர் (இ. 1964)
1891 – பீர்பால் சகானி, இந்திய தாவரவியலாளர் (இ. 1949)
1907 – ஆஸ்ட்ரிட் லிண்ட்கிரென், சுவீடிய எழுத்தாளர் (இ. 2002)
1917 – பார்க் சுங்-கீ, தென்கொரியாவின் 3-வது அரசுத்தலைவர் (இ. 1979)
1922 – தி. கோ. சீனிவாசன், தமிழக எழுத்தாளர், இதழாசிரியர், அரசியல்வாதி (இ. 1989)
1922 – புத்துருசு புத்துருசு காலீ, ஐநாவின் 6வது பொதுச் செயலர் (இ. 2016)
1924 – பாறப்புறத்து, மலையாள சிறுகதை, புதின எழுத்தாளர் (இ. 1981)
1926 – பிலு மோடி, இந்திய அரசியல்வாதி (இ. 1983)
1930 – எட்வேர்ட் வைட், அமெரிக்க விண்வெளி வீரர் (இ. 1967)
1931 – இரா. பெருமாள் ராசு, இந்தியக் கவிஞர்
1942 – இந்திரா கோஸ்வாமி, அசாமிய எழுத்தாளர், பத்திரிகையாசிரியர், கவிஞர் (இ. 2011)
1943 – 1946 – பரதன், தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர் (இ. 1998)
1947 – பி. ஜெ. ஓரூக், அமெரிக்க ஊடகவியலாளர்
1948 – சார்லசு, வேல்சு இளவரசர்
1954 – காண்டலீசா ரைஸ், அமெரிக்க அரசியல்வாதி
1957 – ஆர். பார்த்திபன், தமிழ்த் திரைப்பட நடிகர், இயக்குநர்
1971 – அடம் கில்கிறிஸ்ற், ஆத்திரேலியத் துடுப்பாளர்
1984 – மம்தா மோகன்தாஸ், இந்தியத் திரைப்பட நடிகை