இலங்கை வரலாற்றில் முதல் முறையாக தனிப்பெரும்பான்மையுடன் பாராளுமன்றம் செல்லும் தேசிய மக்கள் சக்தி!
#SriLanka
#Election
Dhushanthini K
3 hours ago
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (NPP) பெற்றுள்ள ஆசனங்களின் அடிப்படையில் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் தனிக் கட்சி ஒன்று தனிப் பெரும்பான்மையை பெறுவது இதுவே முதல் முறை.
தற்போதைய முடிவுகளின்படி, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி இதுவரை 97 ஆசனங்களையும் 60% அதிகமான வாக்குகளையும் பெற்றுள்ளது.
225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற 113 இடங்கள் தேவை.
நாடாளுமன்றத்தில் உள்ள 225 இடங்களில் 196 எம்பிக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மீதமுள்ளவை விகிதாசார பிரதிநிதித்துவம் எனப்படும் வாக்குகளின் சதவீதத்தின் அடிப்படையில் கட்சிகளால் பரிந்துரைக்கப்படும்.