சுவிட்சர்லாந்தில் வலம் வரும் வானிலை தொடர்புடைய புதிய மோசடி

#Switzerland #people #Warning #Climate #Scam
Prasu
2 hours ago
சுவிட்சர்லாந்தில் வலம் வரும் வானிலை தொடர்புடைய புதிய மோசடி

சுவிட்சர்லாந்தில், வானிலை தொடர்புடைய புதிய மோசடி ஒன்று வலம் வருவதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளார்கள்.

அதிகாரிகள் எச்சரிக்கை சமீப காலமாக, சுவிஸ் மக்களுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டு வருகிறது. 

உண்மையாகவே வானிலை ஆராய்ச்சி மையத்தால் அனுப்பப்பட்டதுபோல் காணப்படும் அந்தக் கடிதத்தில் இடம்பெற்றுள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்தால், வானிலை எச்சரிக்கை குறித்த தகவல் கிடைக்கும் என அந்த கடிதம் கூறுகிறது.

ஆனால், அது உண்மையில் வானிலை ஆராய்ச்சி மையத்தால் அனுப்பப்பட்ட கடிதம் அல்ல என்கிறார்கள் அதிகாரிகள்.

அந்தக் கடிதத்தில் இடம்பெற்றுள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்தால், அது மால்வேர் ஒன்றை உங்கள் மொபைலில் டவுன்லோட் செய்துவிடும் என்றும், அதனால் உங்கள் பாஸ்வேர்டுகள் திருடப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளார்கள்.

 ஆகவே, அப்படி யாருக்காவது கடிதம் வந்தால், அதை ஸ்கேன் செய்யவேண்டாம் என்றும், அதை தங்களுக்கு அனுப்பிவிடுமாறும் சைபர் பாதுகாப்புக்கான பெடரல் அலுவலக அதிகாரிகள் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!