மாவை ஐய்யாவுக்கு மறவன்புலவு சச்சிதானந்தம் ஐயா அவர்களின் வேண்டுகோள்

#SriLanka #Election #Women
Prasu
1 year ago
மாவை ஐய்யாவுக்கு மறவன்புலவு சச்சிதானந்தம் ஐயா அவர்களின் வேண்டுகோள்

இலங்கைத் தமிழரசு கட்சியின் மூத்த உறுப்பினர், வாழ்நாள் உறுப்பினர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் எழுதுகிறேன்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 75 ஆண்டுகால வரலாற்றில் பெண் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராகவில்லை. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சிக்கு வாக்களித்த 256,000 வரையான வாக்காளர்களுள் 60% பெண்கள்.

நலிந்த, பின் தங்கிய, சார்பாளர் இலாத குழுக்களுக்கு இடம் கொடுக்கவே விகிதாசாரத் தேர்தல் முறையும் தேசியப் பட்டியலும்.1961இலிருந்தே தமிழரசுக் கட்சியின் அறப் போராளியாக தூதனாக ஆதரவாளனாக உறுப்பினராக நடுவண் குழு உறுப்பினராக அரசியல் குழு உறுப்பினராக இருந்து வந்துள்ள மூத்த உறுப்பினர் நான்.

 தேசியப் பட்டியல் உறுப்பினராகப் பெண் ஒருவரையே தேர்வு செய்ய வேண்டுமெனத் தலைவர் திரு மாவை சேனாதிராஜா அவர்களையும் அவர் தலைமையிலான நடுவண் குழு உறுப்பினர்களையும் கேட்டுக்கொள்கிறேன். நன்றி

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4