இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு : மக்களுக்கு எச்சரிக்கை!

#SriLanka #weather
Thamilini
1 year ago
இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு : மக்களுக்கு எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று (16) மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 சாதகமான வளிமண்டல நிலைமை தொடர்ந்தும் நிலவுவதால் மின்னலினால் ஏற்படும் விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு திணைக்களம் மக்களைக் கோருகிறது.

 நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். 

 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் ஒரு சில இடங்களில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும். 

மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும். இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4