66 கடவுச்சீட்டுகளுடன் இருவர் கைது!

#SriLanka
Thamilini
1 year ago
66 கடவுச்சீட்டுகளுடன் இருவர் கைது!

கஹதுடுவ, சியம்பலாகொட பிரதேசத்தில் 66 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 கஹதுடுவ பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் நேற்று (16) மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 42 மற்றும்  38 வயதுடையவர்கள் எனவும் அவர் சியம்பலாகொட பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சந்தேகநபர் சிங்கப்பூர், ஹொங்கொங், டுபாய் மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளில் பணியாற்றியதாகவும், 2022 ஆம் ஆண்டு இந்த நாட்டுக்கு வந்து மற்றுமொருவருடன் இணைந்து  வசித்து வந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 இவர்கள் சுமார் இரண்டரை வருடங்களாக பல்வேறு நபர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பை வழங்கி  அந்த நபர்களின் கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

 பின்னர், ஏஜென்சிகள் மூலம் விசாவுக்கு விண்ணப்பிப்பதாகவும், வேலைக்கான நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவதாகவும் கூறி, அந்த நபர்களிடம் இருந்து 02-03 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 

 சந்தேகநபர்கள் தங்கியிருந்த வீட்டை சோதனையிட்ட போது, ​​20 மில்லி கிராம் போதைப்பொருள் ஐஸ் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹதுடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4