குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் மீதான வன்முறைகளைக் கண்டித்து பாரிஸில் ஆர்ப்பாட்டம்

#France #Protest #children
Prasu
1 year ago
குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் மீதான வன்முறைகளைக் கண்டித்து பாரிஸில் ஆர்ப்பாட்டம்

குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் மீதான வன்முறைகளைக் கண்டித்து பாரிஸில்12 ஆம் வட்டாரத்தின் Place de la Nation பகுதியில்ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. 

பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 500 வரையானவர்கள் இதில் கலந்துகொண்டனர். சிறுவர்கள் மீது குடும்பங்களில் உடல்ரீதியான தாக்குதல்களும், உளரீதியான தாக்குதல்களும் இடம்பெற்று வருவததாகவும் தெரிவித்து, இதனை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 பிரான்சில் ஆண்டுக்கு, 18 வயதுக்கு கீழுள்ள 130,000 சிறுமிகளும், 30,000 சிறுவர்களும் பாலியல் ரீதியான தாக்குதல்களுக்கு உள்ளாகுவதாகவும், ஆண்டுக்கு 4,000 சிறுவர்கள் குடும்ப வன்முறையினால் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4