உயர்தர பரீட்சை தொடர்பான பிரத்தியேக வகுப்புகளை நடத்த தடை!
இந்த ஆண்டுக்கான உயர்தரப் பொதுச் சான்றிதழ் தொடர்பான பயிற்சி வகுப்புகள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவது எதிர்வரும் 19ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தேர்வு முடியும் வரை இந்த தடை அமலில் இருக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுச் சான்றிதழ் உயர்தரப் பரீட்சை நவம்பர் 25ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் டிசம்பர் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதேவேளை, சர்ச்சையை ஏற்படுத்திய இந்த ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வது தொடர்பில் அடுத்த வாரத்திற்குள் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
உயர்தரப் பரீட்சை முடிவதற்குள் உரிய விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என அதன் செயலாளர் திருமதி திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.