வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

#SriLanka
Thamilini
1 year ago
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (18) அவ்வப்போது மழை பெய்யும் எனவும் சில இடங்களில்  பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் மாலை அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. 

 மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75MM கனமழை பெய்யும். 

இடியுடன் கூடிய மழை தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4