தெரு நாய்களால் அசௌகரியத்திற்கு உள்ளாகும் சுற்றுலா பயணிகள்!

#SriLanka
Thamilini
1 year ago
தெரு நாய்களால் அசௌகரியத்திற்கு உள்ளாகும் சுற்றுலா பயணிகள்!

காலிக்கு வரும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் காலி கோட்டையிலும் நகரிலும் சுற்றித்திரியும் மாடுகள் மற்றும் நாய்களால் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

 சுற்றுலாத்துறையில் முன்னேற்றம் காணும் போது, ​​இதுபோன்ற பிரச்னைகளுக்கு விரைந்து தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர். 

 சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில் இதுவரை நாட்டிற்கு வருகை தந்துள்ள  சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,682,482 ஆகும். 

 நவம்பர் மாதம் முதல் 10 நாட்களில் மட்டும் இந்நாட்டுக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 61,767 ஆகும். 

குளிர்காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில், ஐரோப்பிய சுற்றுலா பயணிகளின் வருகை கணிசமான அளவு அதிகரித்துள்ளதாகவும், எதிர்காலத்தில் இது மேலும் அதிகரிக்கும் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை கணித்துள்ளது. 

 மேலும் அடுத்த வருடம் 25 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதே அரசாங்கத்தின் இலக்காகும். 

 இவ்வாறான நிலையில், நாட்டின் முன்னணி சுற்றுலாத் தலமாக விளங்கும் காலி சுற்றுலாப் பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். 

 காலி கோட்டை மற்றும் நகரை அண்மித்த பகுதிகளில் தெருநாய்கள் மற்றும் கால்நடைகளால் ஏற்படும் அச்சுறுத்தல் இதுவாகும். இப்பிரச்னைக்கு அதிகாரிகள் விரைந்து தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4