மன்னார் இராணுவ முகாமில் பரவி வரும் மர்ம காய்ச்சல்!

#SriLanka #Mannar
Thamilini
1 year ago
மன்னார் இராணுவ முகாமில் பரவி வரும் மர்ம காய்ச்சல்!

மன்னார், வெடித்தலத்தீவு பகுதியில் உள்ள இராணுவ முகாமில் மர்ம காய்ச்சல் பரவி வருகின்ற நிலையில், அங்கு கடமையாற்றும் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் அவர்களை  இராணுவ முகாமிலேயே  தனிமைப்படுத்தியுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. 

 முகாமில் உள்ள சுமார் 25 இராணுவத்தினர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். 

 காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்கள் குழுவொன்றை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவர் சிகிச்சைக்காக IDH வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. 

 முகாமில் உள்ள மேலும் 500 இராணுவத்தினரை தனிமைப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 11ம் திகதிமுதல் காய்ச்சல் பரவி வருவது தெரியவந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4