இம்முறை 18 வைத்தியர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவு!

#SriLanka #Parliament
Thamilini
1 year ago
இம்முறை 18 வைத்தியர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவு!

நாட்டின் பத்தாவது பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள 225 உறுப்பினர்களில் 18 வைத்தியர்கள் உள்ளடங்குகின்றனர். இவர்களில் 16 பேர் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

 வைத்தியர் மொஹமட் ரிஸ்வி சாலி, வைத்தியர் கிறிசாந்த சில்வா அபேசேன, வைத்தியர் நிஹால் அபேசிங்க, வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, வைத்தியர் நிசாந்த சமரவீர, வைத்தியர் சாலிய சதருவன், வைத்தியர் ரணசிங்க, வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன, வைத்தியர் ஜனக சேனாரத்ன, வைத்தியர் நாமல் சுதர்ஷன, வைத்தியர் நிஷாந்த ஜகத் குமார, வைத்தியர் முதித விஜயமுனி, வைத்தியர் பிரசன்ன குணசேன, வைத்தியர் மதுர செனவிரத்ன, வைத்தியர் பி.எச் தம்மிக, வைத்தியர் ஸ்ரீ பவனந்த ராஜா ஆகியோர் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர்.

 இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத், சுயேட்சை குழு சார்பில் போட்டியிட்ட வைத்தியர் இராமநாதன் அச்சுனா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4