ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற நஷ்டஈடு குறித்து நீதிமன்றில் அறிவிப்பு!

#SriLanka #Easter Sunday Attack
Thamilini
1 year ago
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற நஷ்டஈடு குறித்து நீதிமன்றில் அறிவிப்பு!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை மனித உரிமை மனுக்கள் தொடர்பில் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளின் பிரகாரம் 311 மில்லியன் ரூபா நஷ்டஈடு அலுவலகத்திற்கு கிடைத்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று (18.11) உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். 

  சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். 

 இங்கு, பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த இழப்பீடுகள் எவ்வாறு வழங்கப்பட்டுள்ளன என்பது குறித்து அடுத்த நாள் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பெஞ்ச் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலுக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4