7 1/2 கோடி ரூபா பணத்துடன் மாயமான நபர் : பொது மக்களின் உதவியை நாடிய பொலிஸார்!

#SriLanka
Thamilini
1 year ago
7 1/2 கோடி ரூபா பணத்துடன் மாயமான நபர் : பொது மக்களின் உதவியை நாடிய  பொலிஸார்!

பணம் கொள்ளையடிக்கப்பட்ட சந்தேக நபர் ஒருவரை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர். 

 மினுவாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பாதுகாப்பாக பணம் கொண்டு செல்லும் அமைப்பு ஒன்றின் சாரதியாக கடமையாற்றிய ஒருவர் நேற்று (18) அந்த வாகனத்தில் இருந்த 7 1/2 கோடி ரூபா பணத்தை திருடிக்கொண்டு அதே வாகனத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். 

 குறித்த வாகனம் கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உகல்பொட பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன், சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். 

 இதன்படி, மேற்படி நபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 

 01. சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் - கம்பஹா - 0718591608 02. 

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் - கம்பஹா மாவட்டம் (I) - 0718591610

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4