முடிவுக்கு வந்த 29 வருட பந்தம்: ரஹ்மானை பிரிவதாக அறிவித்த மனைவி

இசைப்புயல் ஏஆர் ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு தனது கணவரை பிரியவுள்ளதாக அறிவித்துள்ளளார்.
அவரது ரசிகர்களை பேரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ள்து. இருவருக்கும் இடையே தீர்க்க முடியாத இடைவெளி இருந்ததால் இந்த முடிவை எடுத்துள்ளதாக மனைவி தெரிவித்துள்ளார்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுடன் 29 வருடங்களாக திருமண உறவில் இருந்த சாயிரா பானு தற்போது திடீரென அவரை விவாகரத்து செய்வதாக அறிவித்தமை உலகளவில் பெரும் சலலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாயிராவின் வக்கீல் இந்த பிரிவு பற்றிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். இந்திய அளவில் பிரபலமான ஆன விவாகரத்து வக்கீல் ஒருவர் தான் சாயிரா மற்றும் ரஹ்மான் சார்பில் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் தற்போது இன்ஸ்டாவில் ஒரு கோரிக்கை வைத்து இருக்கிறார்.
"இந்த நேரத்தில் எங்களது privacyக்கு மதிப்பளியுங்கள். புரிந்துகொண்டதற்கு நன்றி" என அவர் கூறி இருக்கிறார்.



