தேசிய வேலைத்திட்டத்தை வலுப்படுத்த அரச ஊழியர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் - பிமல் ரத்நாயக்க!
தேசிய வேலைத்திட்டத்தை வலுப்படுத்துவதற்கு அரச ஊழியர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (20.11) துறைமுக அமைச்சின் பதவியேற்பு நிகழ்வில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், "இனிமேல் நமக்கு வாக்களித்த அனைவருக்காகவும் பாடுபட வேண்டும். இனிமேல் எந்த அரசியலும் இல்லை. துறைமுகம் தனியார் மற்றும் பொதுத்துறை ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய ஒரு செயல்முறைக்கு செல்ல வேண்டும்."
“இப்போது அதிகாரிகளுக்கு வேலை செய்வது இலகுவாக இருக்கும். அவர்களும் ஒருவராக பணியாற்ற வாய்ப்பளிப்போம். அதையே எதிர்பார்க்கிறோம்.
தனது அதிகாரத்தின் கீழ் உள்ள அமைச்சுக்களில் கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரிய ஊழல்கள் தொடர்பில் விசாரணை செய்து சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
"எங்களுக்கு இங்கு தனிப்பட்ட இலக்குகள் எதுவும் இல்லை. இந்த அமைச்சு இரண்டு இளம், திறமையான மற்றும் படித்த பிரதி அமைச்சர்களைப் பெறுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.