100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும்!
மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
இதனிடையே, நவம்பர் 23-ம் திகதி தென்கிழக்கு வங்கக் கடலைச் சுற்றி குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகலாம் என்றும், அதன் பிறகு அடுத்த 2 நாட்களில் தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாகலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த அமைப்பு தொடர்ந்து வளர்ச்சியடைந்து நாட்டின் கிழக்கு கடற்கரைக்கு அருகில் செல்லும் என்று நம்பப்படுகிறது.
இதேவேளை, வடக்கு வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மாலை அல்லது இரவு வேளையில் தீவின் ஏனைய பகுதிகளில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும்.
இடியுடன் கூடிய மழைதற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.