தேசியப்பட்டியலில் ரவி கருநாணயக்கவை நியமிப்பு: ரணில் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

#SriLanka
Mayoorikka
3 hours ago
தேசியப்பட்டியலில் ரவி கருநாணயக்கவை நியமிப்பு: ரணில் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவை நியமித்தமை தொடர்பில் சுயாதீன விசாரணைகளை மேற்கொள்வதற்கு நான்கு பேர் கொண்ட குழுவொன்றை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.

 செயலாளர் பதவியை வகிக்கும் சட்டத்தரணி யாசஸ் டி சில்வா, இந்த சுயாதீன குழுவின் ஏனைய உறுப்பினர்களாக திரு.குமார் துனுசிங்க, சட்டத்தரணி இந்திக்க வேரகொட மற்றும் கலாநிதி விதானகே ஆகியோரை நியமித்துள்ளார்.

 முன்னாள் ஜனாதிபதி  ரணில் விக்கிரமசிங்க மற்றும் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட கூட்டணியின் பங்குதாரர்கள் இணைந்து நேற்று (நவம்பர் 20) கொழும்பு மல் வீதி அரசியல் காரியாலயத்தில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் இந்தக் குழுவை நியமிக்க தீர்மானித்துள்ளனர்.

ரவி கருணாநாயக்கவை தேசியப் பட்டியலில் இருந்து நியமித்தமை சட்டவிரோதமானது எனவும், மைத்திரியின் பங்குதாரர்களின் நம்பிக்கைக்கு பங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் கட்சித் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 இதன்படி, சுயாதீன குழுவொன்றை நியமித்து அதன் விசாரணை அறிக்கையை மூன்று வாரங்களுக்குள் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்  ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிப்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 அத்துடன், இந்த அறிக்கையை ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவிடம் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!