கடற்தொழில் அமைச்சு சவால் நிறைந்தது: சந்திரசேகரம்
கடற்தொழில் அமைச்சு சவால் நிறைந்தது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம் தெரிவித்துள்ளார்.
பத்திரிக்கை ஒன்றுக்கு வழங்கபப்ட்டுள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த 76வருடங்களாக நாட்டை ஆட்சி செய்தவர்கள் கடற்தொழில் அமைச்சை பயன்படுத்தி கடற்தொழிலாளர்களுடைய அல்லது நாட்டு மக்களினுடைய வாழக்கையில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
கடற்றொழிலாளர்களின் தனிப்பட்ட முயற்சிகளின் காரணமாக தான் இந்த தொழில் துறை பாதுகாக்கப்பட்டுள்ளதே தவிர அரசாங்கத்தின் ஒன்றிணைந்த வேலைத்திட்த்தின் கீழ் இது முன்னெடுக்கப்படவில்லை என சுட்டிக் காட்டியுள்ள அவர், கடற்தொழிலார்களின் ஒத்துழைப்புடன் இதனை முன்னெடுப்பதற்கான திட்டங்களினை தாம் வகுத்துள்ளதாவும் தெரிவித்தார்.
இந்த திட்டங்களினை முன்னெடுக்கின்ற போது அதற்கு தடையாக வருகின்ற பிரச்சனையாக இந்திய படகுகளின் அத்துமீறலே இருக்கும் என குறிப்பிட்ட அமைச்சர் இந்த அத்துமீறல்களை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் எங்கள் கடல் எல்லைகளை அவர்கள் மீற முடியாது எனவும் அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எமது அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.