சுவிட்சர்லாந்தின் சில பகுதிகளில் பனிப்பொழிவு ஏற்படும் அபாயம் - மக்களுக்கு எச்சரிக்கை

#Warning #Climate #Snow #Swiss
Prasu
7 hours ago
சுவிட்சர்லாந்தின் சில பகுதிகளில் பனிப்பொழிவு ஏற்படும் அபாயம் - மக்களுக்கு எச்சரிக்கை

சுவிட்சர்லாந்தை நோக்கி பனிப்பொழிவு நகர்வதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.இதனால் மத்திய அரசு பல இடங்களில் எச்சரிக்கை நிலை 3 என அறிவித்துள்ளது.

மேலும் அதிக அளவு புதிய பனிப்பொழிவு காரணமாக குறிப்பிடத்தக்க ஆபத்து இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தாழ்வான பகுதிகளில் ஒப்பீட்டளவில் அதிக அளவு பனி பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வடக்கு மற்றும் கிழக்கு சுவிட்சர்லாந்தில், பல மணிநேரங்களுக்கு தொடர்ச்சியான பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது.

பனிப்பொழிவு காரணமாக சாலை, ரயில் மற்றும் விமானப் போக்குவரத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது. 

 மத்திய அரசின் கூற்றுப்படி, ஜெர்மன் மொழி பேசும் சுவிட்சர்லாந்து, கிழக்கு சுவிட்சர்லாந்து, சூரிச், மத்திய சுவிட்சர்லாந்தின் சில பகுதிகள் மற்றும் மிட்டல்லாந்து ஆகிய பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!