100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்ய வாய்ப்பு!

#SriLanka
Mayoorikka
5 hours ago
100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்ய வாய்ப்பு!

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக் கூடும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

 அதேவேளை வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கிலோமீற்றர் வரை பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 தற்காலிக பலத்த காற்று மற்றும் இடி, மின்னலினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு திணைக்களம் மக்களை கேட்டுக்கொள்கிறது.

 இதனிடையே, நவம்பர் 23-ம் தேதி தென்கிழக்கு வங்கக் கடலைச் சுற்றி குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகலாம் என்றும், அடுத்த 2 நாட்களில் தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 இந்த அமைப்பு தொடர்ந்து வளர்ச்சியடைந்து தீவின் கிழக்கு கடற்கரைக்கு அருகில் செல்லும் என்று நம்பப்படுகிறது.

 எனவே இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்வரும் கணிப்புகள் மற்றும் அறிவிப்புகள் தொடர்பில் மக்கள் அவதானம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!