மாவீரர் தினத்திற்கு சிறிதரன் செல்வதால் ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு!

#SriLanka #Parliament
Mayoorikka
6 hours ago
மாவீரர் தினத்திற்கு சிறிதரன் செல்வதால் ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு!

பத்தாவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு மாவீரர் தினம் காரணமாக ஒத்தி வைக்கபப்ட்டுள்ளது.

 பத்தாவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு நேற்று வியாழக்கிழமை (21) நடைபெற்றிருந்த நிலையில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

 நேற்றைய அமர்வில் சபாநாயகர், பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதித் தலைவர் தெரிவுகள் இடம்பெற்றிருந்தன. இதனையடுத்து, புதிதாக தெரிவு செய்யப்பட்ட சபாநாயகர் அஷோக்க ரன்வெலவுக்கு எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார். 

அவரைத்தொடர்ந்து மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம் வாழ்த்துக்களைத் தெரிவு செய்திருந்தார். அவர்களைத்தொடர்ந்து சிவஞானம் சிறிதரன், நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதற்காக தமது ஆசனங்களில் இருந்து எழுந்தபோதும், நேரமின்மை காரணமாக வாழ்த்துரைகள் மட்டப்படுத்தப்பட்டன.

 இதனை அவதானித்த சபை முதல்வர் அமைச்சர் பிமல்ரத்நாயக்க, கட்சித்தலைவர்கள் கூட்டத்திற்காக பிரதிநிதிகள் ஒன்றுகூடிய வேளையில் சிறிதரனிடத்தில் மன்னிப்புக்கோரியதோடு எதிர்காலத்தில் இவ்விதமான நடைபெறாது என்றும் கூறியுள்ளார்.

 இதனையடுத்து நடைபெற்ற முதலாவது கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் டிசம்பர் மாதத்தில் ஆரம்பமாகவுள்ள முதலாவது பாரளுமன்ற அமர்வுக்கான நிகழ்ச்சி நிரலை தயாரிப்பதற்கான பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய கூட்டத்தினை நடத்துவதற்கான திகதி தீர்மானிப்பதுதொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

 இதன்போது ஆளும் தரப்பினால் 26ஆம், 27ஆம் திகதிகள் முன்மொழியப்பட்டபோது சிறிதரன் குறித்த இரண்டு திகதிகளில் மாவீரர்கள் வாரத்தின் இறுதிநாளாக இருப்பதால் பங்கெடுப்பதில் சிரமங்கள் காணப்படுவதாக கூறியுள்ளார். 

 இதனையடுத்து 28ஆம் திகதி மாலை பாராளுமன்ற அலுவல்கள் பற்றி குழுவைக் கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

 இதேநேரம், மாவீரர் வாரத்தினால் கூட்டத்தில் பங்கேற்க முடியாது என்ற சிறிதரன் கூறியபோதும் எவ்விதமான பிரதிபலிப்புக்களையும் கட்சித்தலைவர்கள் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!