பிரான்ஸ் அரசாங்கத்திற்கு மிரட்டல் விடுத்த வலதுசாரி கட்சி தலைவர்
#France
#government
#Threat
Prasu
5 hours ago
அடுத்த வருட பட்ஜெட்டில், தனது National Rally (RN) கட்சியின் கருத்துக்களையும் கருத்தில் கொள்ளாவிட்டால் பிரதமர் மிஷெல் பார்னியேரின் கூட்டணி அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிப்போம் என அக்கட்சியைச் சேர்ந்த Marine Le Pen மிரட்டல் விடுத்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய நிதியை மோசடி செய்த விடயத்தில் Marine Le Penக்கு பங்கு இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு அவர் அரசியலில் ஈடுபட கட்டாயத் தடை விதிக்க வேண்டும் என்று சட்டத்தரணிகள் கோரியுள்ளார்கள்.
அவர் குற்றச்சாட்டுகளை மறுத்தாலும், நீதிபதிகள் Marine Le Pen குற்றவாளி என்பதை உறுதிசெய்தால், அவர் 2027 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தடைசெய்யப்படும்.