பாடசாலைகளுக்கு நீண்ட விடுமுறை - பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

#SriLanka #School #Student #Warning
Prasu
4 hours ago
பாடசாலைகளுக்கு நீண்ட விடுமுறை - பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

இலங்கையில் உள்ள பாடசாலைகளுக்கு மிக நீண்ட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால், விடுமுறை காலத்தில் பிள்ளைகள் தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று சுகாதாரத் துறையினர் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்திற்கும் இன்று முதல் விடுமுறை வழங்கப்படுகின்றது.

அனைத்து பாடசாலைகளினதும் மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கற்றல் நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு பெறுவதுடன், மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 2ஆம் திகதி ஆரம்பமாகும்.

இதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதம் 2ஆம் திகதியே பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக மீள திறக்கப்படும். இவ்வாறான சந்தர்ப்பத்தில், பல பிள்ளைகள் விடுமுறை நாட்களில் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள், மேலும் டிஜிட்டல் திரைகளின் பயன்பாட்டிற்கு அடிமையாகியுள்ளனர். 

இதனால், 'உளவியல் சமூக சூழலை' இழந்து பிள்ளைகள் மன உளைச்சலுக்கு ஆளாகும் அபாயம் உள்ளதாக, சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர். கவலை, மனச்சோர்வு மற்றும் தூக்கமின்மைக்கு சிகிச்சை பெறும் மின்னணு திரைகளுக்கு அடிமையான குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 

 மேலும், பல பிள்ளைகள் தவறான இணையளத் தளப் பாவனையில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது. எனவே, பிள்ளைகள் மீதான தங்கள் பொறுப்பு குறித்து பெற்றோர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத் திணைக்களம் கடுமையாக எச்சரித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!