மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற தவறினால் மக்களும் கைவிடுவார்கள் - ஜனாதிபதி!

#SriLanka #President #AnuraKumaraDissanayake
Thamilini
1 year ago
மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற தவறினால் மக்களும் கைவிடுவார்கள் - ஜனாதிபதி!

தற்போதைய அரசாங்கம்  மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தவறினால், நல்ல எதிர்காலம் பற்றிய கனவுகளை மக்களும் கைவிடுவார்கள் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் அமைச்சின் ஊழியர்கள் மத்தியில் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், அரசியல் மாற்றங்களின் போது அரச உத்தியோகத்தர்கள் என்ற முன்முடிவில் இருந்து செயற்பட்ட வரலாறு எமது நாட்டிற்கு உண்டு ஆனால் இனிமேல் அரச உத்தியோகத்தர்களின் நன்மை தீமைகளை அளவிடும் அளவுகோல் அவர்களின் பங்களிப்பாகும். .

 அரச உத்தியோகத்தர்களுக்கு தமது கடமைகளை நிறைவேற்றுவதில் ஏதேனும் அநீதி அல்லது தவறுகள் இடம்பெற்றால் அவர்களுக்காக தாம் துணை நிற்போம் எனத் தெரிவித்துள்ளார். 

வருமானம் ஈட்டும் திணைக்களங்கள் தொடர்பில் மக்களிடம் நல்ல பிம்பம் இல்லை எனக் கூறிய அவர், அதனை மாற்றுவது சிரமமானது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4