புல்கமுவ ஓயாவில் பாய்ந்த ஜுப் வண்டி : இருவர் பரிதாபமாக பலி!

#SriLanka #Accident
Thamilini
1 year ago
புல்கமுவ ஓயாவில் பாய்ந்த ஜுப் வண்டி : இருவர் பரிதாபமாக பலி!

குளியாப்பிட்டிய பகுதியில் வேன் ஒன்று  புல்கமுவ ஓயாவில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் இருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

குளியாப்பிட்டியவிலிருந்து ஹெட்டிபொல நோக்கிச் சென்ற ஜீப் வண்டியொன்று புல்கமுவ ஓயாவில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 

உயிரிழந்தவர்கள் 25 மற்றும் 27 வயதுடைய குருநாகல் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், இருவரும் சகோதரர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

விபத்து இடம்பெற்ற இடம் வளைவுகள் நிறைந்த இடம் எனவும், தற்போதைய விசாரணைகளின் படி வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதி ஓரத்தில் உள்ள ஓடையில் விழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

 சடலங்கள் குளியாப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், குளியாப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4