பிரான்சில் கடும் பனிப்பொழிவு காரணமாக மக்கள் பாதிப்பு

#France #people #Climate #Snow
Prasu
1 year ago
பிரான்சில் கடும் பனிப்பொழிவு காரணமாக மக்கள் பாதிப்பு

பிரான்சில், Caetano புயல் என அழைக்கப்படும் புயலால் ஏற்பட்ட பனிப்பொழிவால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு 170,000 வீடுகள் இருளில் மூழ்கியுள்ளதாக பிரான்ஸ் ஆற்றல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய அமைச்சர், மின் தடையை சரி செய்யும் பணியில் 1,400க்கும் அதிகமான பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

புயல் காரணமாக சில முக்கிய விமான நிலையங்களில் சில விமானங்கள் ரத்து செய்யப்பட இருப்பதால் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

 அதிவேக ரயில் சேவையும் பாதுகாப்பு கருதி சில இடங்களில் குறைக்கப்பட்டுள்ளது மற்றும் சில இடங்களில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4