வங்கக் கடலில் உருவாகியுள்ள தாழமுக்கம் : நாட்டின பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

#SriLanka #weather
Dhushanthini K
3 hours ago
வங்கக் கடலில்  உருவாகியுள்ள தாழமுக்கம் : நாட்டின பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

 இது தொடர்ந்து வளர்ச்சியடைந்து வடமேற்கு திசையில் மேற்கு நோக்கி நகர்ந்து தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பகுதியை சுற்றி வரும் நவம்பர் 25ம் திகதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்பு உள்ளது.

 இந்த அமைப்பு தொடர்ந்து வளர்ச்சியடைந்து தீவின் வடக்கு கடற்கரையை நோக்கி நகரும் என்று நம்பப்படுகிறது. 

 இந்த முறைமையின் தாக்கம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் தொடர்ந்தும் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இன்று (24) அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான கடும் மழை பெய்யக்கூடும்.

வடமத்திய மாகாணத்தில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!