நிலவும் சீரற்ற வானிலை : பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு!

#SriLanka #exam #Test
Thamilini
1 year ago
நிலவும் சீரற்ற வானிலை : பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு!

சீரற்ற வானிலை காரணமாக நெடுந்தூரம் உள்ள பரீட்சை நிலையங்களுக்கு செல்ல முடியாத மாணவர்களை  அருகில் உள்ள பரீட்சை நிலையங்களுக்கு செல்லுமாறு பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

வெள்ளம் காரணமாக வீதிகள் தடைப்பட்டால் அருகில் உள்ள பரீட்சை நிலையங்களுக்குச் சென்று பரீட்சைக்குத் தோற்றுவதற்கு அந்த மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அத்துடன் வெள்ள நிலைமை காரணமாக போக்குவரத்து இடையூறு ஏற்பட்டால் 117 என்ற சிறப்பு தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்குத் தேவையான வசதிகளை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஊடாக வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4