மலையத்திற்கான ரயில் சேவைகள் தாமதமடையும்!

#SriLanka #Train
Thamilini
1 year ago
மலையத்திற்கான ரயில் சேவைகள் தாமதமடையும்!

மலையக பகுதியூடாக பயணிக்கும் புகையிரதங்கள் தடை மற்றும் தாமதத்தை எதிர்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பதுளைக்கும் பண்டாரவளைக்கும் இடையிலான புகையிரத பாதையில் மண்மேடுகளும் கற்களும் சரிந்து வீழ்ந்துள்ளமையினால் இந்த தடைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. 

இதேவேளை, மோசமான காலநிலை காரணமாக பதுளை மாவட்டத்தில் பல வீதிகள் தடைப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

மண்சரிவு, மரங்கள் மற்றும் பாறைகள் சரிந்து வீழ்ந்தமையினால் வீதிகள் தடைப்பட்டுள்ளதாக அந்த பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, பதுளை பண்டாரவளை வீதி உடுவர கிரிமண்டலயத்திற்கு அருகில், ஹப்புத்தளை பெரகல வீதி, பதுளை - பசறை வீதி மூன்றாம் இடுகை, ஸ்பிரிங்வேலி வீதி ஊடாக பதுளை கடான, பதுளை பசறை வீதியின் 7, பிபில லுணுகல வீதி அரவகும்புர மற்றும் ஏனைய வீதிகள் தடைப்பட்டுள்ளன. 

 வீதிகள் தடைப்பட்டுள்ளதால், மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு சாரதிகளை பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4