ஆழ்ந்த தாழமுக்கம் இன்று மாலை 4.00 மணியளவில் புயலாக மாற்றம் பெறும்

#SriLanka #weather
Mayoorikka
3 hours ago
ஆழ்ந்த தாழமுக்கம் இன்று மாலை 4.00 மணியளவில் புயலாக மாற்றம் பெறும்

கடந்து கடந்த 23. 11 .2024 அன்று வங்காள விரிகுடாவில் தோற்றம் பெற்ற காற்றழுத்த தாழ்வு நிலை தற்பொழுது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக திருகோணமலையின் இறக்கண்டிக்கு கிழக்காக 80 கிலோ மீட்டர் தூரத்தில் அதன் மையம் அமைவு பெற்றுள்ளது. 

 இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை 4.00 மணியளவில் புயலாக மாற்றம் பெறும். வழமையாக வடகீழ் பருவக்காற்று காலங்களில் வங்காள விரிகுடாவில் தோன்றும் தாழமுக்கம் மற்றும் புயல்களின் நகர்வுப்பாதையை ஒரளவு தெளிவாக கணிக்க முடியும். 

 ஆனால் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வுப்பாதையை தெளிவாக கணிக்க முடியவில்லை. 

அத்தோடு இதன் கரையைக் கடக்கும் இடம் இன்னமும் தெளிவாகவில்லை. தற்போதைய நிலையின் படி இந்த புயல் வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து எதிர்வரும் 30ம் திகதியளவில் சென்னைக்கும் கடலூருக்குமிடையில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆனால் நகரும் பாதையும் கரையைக் கடக்கும் இடமும் மாற்றமடையலாம் என்பதனைக் கருத்தில் கொள்க. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கிழக்கு மாகாணத்தின் திருகோணமலைக்கும் வடக்கு மாகாணத்தினுடைய அனைத்து மாவட்டங்களுக்கும் தற்போது கிடைத்து வருகின்ற மழை நாளை வரை தொடர்வதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. 

ஆனால் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு சற்று வேகமான காற்றுடன் மிகக் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. 

 மட்டக்களப்பு மற்றும் அம்பாறையை பொருத்தவரை இன்று முதல் மழை படிப்படியாக குறைபடையும் ஆனாலும் எதிர்வரும் 30.11.2024 வரை இடை இடையிடையே கனமழை கிடைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன தொடர்ச்சியாக கிடைத்த வருகின்ற கனமழை காரணமாகவும் குளங்களினுடைய மேலதிகமான உபரி நீர் வான் பாய்வதன் காரணமாகவும் வடக்கு(அனைத்து மாவட்டங்களும்)மற்றும் கிழக்கு மாகாணங்களின் உடைய பல பகுதிகளிலும்(முக்கியமாக மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை)வெள்ள அர்த்தத்துக்கான வாய்ப்புகள் மிக உயர்வாகவே காணப்படுகின்றன.

 அன்புக்குரிய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மக்களே..... நாம் வெள்ள அனர்த்தத்துக்கான வாய்ப்புக்களை அதிகம் கொண்டிருப்பதை கருத்தில் கொண்டு எங்களுடைய பாதுகாப்பு ஏற்பாடுகளில் கூடிய கவனம் செலுத்தி ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்போம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!