ஃபெங்கால் சூறாவளி : நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

#SriLanka #weather #Rain
Dhushanthini K
1 week ago
ஃபெங்கால்  சூறாவளி : நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

ஃபெங்கால் (FENGAL) சூறாவளி வடக்கிலிருந்தும் காங்கசன்துறையிலிருந்தும் சுமார் 360 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நிலையில் கடும் மழையுடனான வானிலை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

குறிப்பாக வட மாகாணத்தில் சில இடங்களில் அதிகபட்சமாக 75 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சப்ரகமுவ மாகாணம் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யும் அதேவேளை, மேற்கு, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் மழை பெய்யும்.

இடியுடன் கூடிய மழை தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!