சுவிஸில் இஸ்லாமிய பெண்களின் ஆடைக்கு எதிரான திடீர் சட்டம்!
சுவிஸில் இஸ்லாமிய பெண்களின் ஆடைக்கு எதிரான திடீர் சட்டம் 01-01-2025 இல் இருந்து அமுலுக்கு வருகிறது.
ஜனவரி 1, 2025 முதல், சுவிட்சர்லாந்து முழுவதும் பொது மக்கள் கூடக் கூடிய இடங்களில் முகத்தை மூடுவது தடைசெய்யப்படும்.
நான்கு ஆண்டுகளுக்கு முன் மக்கள் அங்கீகரித்த பர்தாதடை முயற்சி, தற்போது அமலுக்கு வருகிறது.
சட்டம் அமலுக்கு வருகிறது. 2009ஆம் ஆண்டில், சுவிட்சர்லாந்தின் நீதித்துறை அமைச்சர் ஈவ்லின் விட்மர், அதிகமான பெண்கள் நிகாப் அணிவதைக் கண்டால் தடை விதிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
செப்டம்பர் 2013 இல், சுவிட்சர்லாந்தின் டிசினோவில் 65 சதவீத மக்கள் பொது இடங்களில் எந்த சமூகமும் முகத்தை மூடுவதைத் தடைசெய்வதை ஆதரவாக வாக்களித்தனர்.
சுவிட்சர்லாந்தின் 26 மாகாணங்களில் 2009ஆம் ஆண்டில் முதல்முறையாக தடை விதிக்கப்பட்டது.
சுவிட்சர்லாந்தின் 80 லட்சம் மக்கள் தொகையில் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் முஸ்லிம்கள்.