நலன்புரி திட்டங்களுக்கான விண்ணப்பங்களை சமர்பிப்பது தொடர்பில் வெளியான அறிவிப்பு!

#SriLanka #Aswesuma
Thamilini
1 year ago
நலன்புரி திட்டங்களுக்கான விண்ணப்பங்களை சமர்பிப்பது தொடர்பில் வெளியான அறிவிப்பு!

பிப்ரவரி 2024 இல் விண்ணப்பித்த குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் இரண்டாம் கட்ட நிவாரணத்திற்கான நிறுத்த விண்ணப்பங்களை அனுப்பத் தேவையில்லை என நலன்புரி நன்மைகள் வாரியம் அறிவித்துள்ளது. 

குறித்த விண்ணப்பங்கள் ஏற்கனவே அமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

அஸ்வசும நலன்புரி திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாத குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க டிசம்பர் 09 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

நிவாரணத் திட்டத்துக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியாத குடும்பங்கள் மட்டுமே தற்போது விண்ணப்பிக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இதேவேளை அஸ்வசும நலன்புரி உதவித் திட்டத்திற்கு தனித்தனியாக விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பப் படிவங்களை பிரதேச செயலகங்களில் சமர்ப்பிக்க ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 எனவே குடும்பமாக விண்ணப்பிக்கும் போது அனைத்து உறுப்பினர்களும் பிரதிநிதித்துவம் பெறும் வகையில் ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பித்தால் போதுமானது என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4