நீண்ட சட்ட போராட்டத்திற்கு பின் சுவிஸ் குடியுரிமையை பெற்ற ஆஸ்திரேலிய பெண்!
ஆஸ்திரேலியாவைச்சேர்ந்த பெண் ஒருவர் நீண்டகால போராட்டத்தின் பின் சுவிஸ் குடியுரிமையை பெற்றுக்கொண்டுள்ளார்.
1971 இல் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தம்பதியினரால் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்ட குறித்த பெண் தனது உயிரியல் பெற்றோரை கண்டுப்பிடித்ததை தொடர்ந்து சுவிஸ் குடியுரிமைக்காக விண்ணப்பித்திருந்தார்.
இருப்பினும் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் அவர் தனது குடியுரிமையை இழந்துவிட்டதாக நீதிமன்றம் அறிவித்தது. இதனையடுத்து சட்ட போராட்டத்தை எதிர்கொண்ட அவர், கன்டோனல் நீதி மற்றும் உள்துறை இயக்குநரகத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால் அந்த முயற்சியில் அவர் தோல்வியை தழுவினார்.
இதனைத் தொடர்ந்து நிர்வாக நீதிமன்றத்தை நாடிய அவர், சுவிஸ் குடியுரிமை தொடர்பான கூட்டாட்சிச் சட்டத்தின்படி (BüG), திருமணத்திற்குப் புறம்பாகப் பிறக்கும் குழந்தை, பெற்றோரில் ஒருவர் சுவிஸாக இருந்தால் தானாகவே சுவிஸ் குடிமகனாகக் கருதப்படும் என்ற சட்ட விதிகளுக்கு ஏற்ப குடியுரிமை வழக்கில் வெற்றிப் பெற்றுள்ளார்.
இருப்பினும், வெளிநாட்டில் பிறக்கும் குழந்தைகள் 22 வயதிற்குள் சுவிஸ் அதிகாரசபையில் பதிவு செய்யாவிட்டால் தங்களது குடியுரிமையை இழக்கிறார்கள்.