திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுவிக்க கோரிக்கை!

#SriLanka
Mayoorikka
1 year ago
திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுவிக்க கோரிக்கை!

திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனலைதீவு கடற்தொழிலாளர்களை விடுவிக்க வேண்டும் என அவர்களின் உறவினர்கள் கோரியுள்ளனர்.

 கடந்த ஜூன் மாதம் 10 ஆம் திகதி அனலைதீவு பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு படகு ஒன்றில் சென்ற இரு கடற்தொழிலாளர்களும், கடல்சீற்றம் காரணமாக தமிழக கடற்பரப்பினுள் தத்தளித்த நிலையில், தமிழக கடற்தொழிலாளர்களால் மீட்கப்பட்டு தமிழக கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

 அவர்கள் இருவரும் விசாரணைகளின் பின்னர் சிறைச்சாலையில் தடுத்து வைக்கபப்ட்டிருந்த நிலையில் கடந்த 30 ஆம் திகதி நீதிமன்றால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

 குறித்த இருவரையும் இலங்கைக்கு திருப்பி அனுப்பும் நோக்குடன் திருச்சி சிறப்பு முகாமில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 

 இந்நிலையில் அவர்களின் உறவினர்கள், ஊர்காவற்துறை பகுதியில் ஊடகவியலாளர்களை சந்தித்த போது, கடல்சீற்றம் காரணமாக தமிழக கடற்பரப்பினுள் சென்ற அனலைதீவை சேர்ந்த திருச்செல்வம் மைக்கல் பெர்னாண்டோ மற்றும் நாகலிங்கம் விஜயகுமார் ஆகிய இருவரும் தற்போது நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

 அவர்கள் இருவரையும் , அவர்களின் படகு மற்றும் அதன் வெளியிணைப்பு இயந்திரத்துடன் கடல் வழியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4