இலங்கையில் மரக்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரிப்பு!

#SriLanka
Mayoorikka
1 year ago
இலங்கையில் மரக்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரிப்பு!

நிலவிய சீரற்ற வானிலை காரணமாக சந்தையில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதற்கமைய, பேலியகொடை மெனிங் சந்தையில் இன்று (4) காலை மரக்கறிகளின் விலை இவ்வாறு பதிவாகியிருந்தது.

 கெரட் 1 கிலோகிராம் - ஒரு வாரத்திற்கு முன் 50 ரூபா - தற்போதைய விலை 120 ரூபா

 போஞ்சி 1 கிலோகிராம் - ஒரு வாரத்திற்கு முன் 250 ரூபா - தற்போதைய விலை 900 ரூபா

 கறிமிளகாய் 1 கிலோகிராம் - ஒரு வாரத்திற்கு முன் 500 ரூபா - தற்போதைய விலை 700 ரூபா

 கோவா 1 கிலோகிராம் - ஒரு வாரத்திற்கு முன் 30 ரூபா - தற்போதைய விலை 130 ரூபா

 லீக்ஸ் 1 கிலோகிராம் - ஒரு வாரத்திற்கு முன் 130 ரூபா - தற்போதைய விலை 250 ரூபா ​

இதேவேளை, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் மரக்கறிகளின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 மரக்கறிகளின் விலை அதிகரிப்பால் பொருளாதார ரீதியாக தாங்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4