உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து தன்னிடம் பல தகவல்கள் உள்ளன: பாராளுமன்றில் சாணக்கியன்

#SriLanka
Mayoorikka
1 year ago
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து தன்னிடம் பல தகவல்கள் உள்ளன: பாராளுமன்றில் சாணக்கியன்

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து தன்னிடம் பல தகவல்கள் உள்ளதாக மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

 2019ம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் யாருக்கு தொடர்புள்ளது என்பது குறித்து அரசாங்கம் தீவிரவிசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.

 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இந்த அரசாங்கத்திற்கு பெரும் பொறுப்புள்ளது பிள்ளையான் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார், இதற்கு அப்பால் நீங்கள் யாரை கைதுசெய்யவேண்டும் என நாங்கள் உங்களிற்கு தெரிவிக்கவேண்டியதில்லை   இது பொலிஸாரிற்குரிய விடயம்இஎனினும் உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து எங்களிடம் மேலும் பல தகவல்கள் உள்ளன.'

 நான் பாதுகாப்பு செயலாளரிடம் இது குறித்து தெரிவித்துள்ளேன்.பாதுகாப்பு அமைச்சரும் இங்கிருக்கின்றார்எங்களிற்கு ஒரு வாய்ப்பை தாருங்கள்.

 நாங்கள் திரிபோலி பட்டாலியன் குறித்து பல விடயங்களை நாடாளுமன்றத்தில் விவாதித்துள்ளோம்.மேலும் ஆதாரங்களை பெறுவதற்கு நாங்கள் முயற்சிப்போம்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4