இனவாதத்தை இல்லாதொழிக்க மாத்திரமே பயங்கரவாத தடை சட்டம் பயன்படுத்தப்படும் - ஜனாதிபதி!

#SriLanka #AnuraKumaraDissanayake
Thamilini
1 year ago
இனவாதத்தை இல்லாதொழிக்க மாத்திரமே பயங்கரவாத தடை சட்டம் பயன்படுத்தப்படும் - ஜனாதிபதி!

அதிகார பகிர்வு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன் கலந்துரையாடியதாக தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி அனுரகுமார திஸாயக்கவிற்கும், இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமான கலந்துரையாடல் நேற்று (04.12) இடம்பெற்றது. 

இதன்போது பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக அதிகார பகிர்வு தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக சாணக்கியன் தெரிவித்துள்ளார். 

​​எதிர்காலத்தில் புதிய அரசியலமைப்பு மூலம் அரசியல் தீர்வு, அதிகாரப் பகிர்வு மற்றும் காணாமல் போனவர்கள், காணி சர்ச்சைகள், இராணுவ முகாம்களில் இருந்து காணிகளை கையகப்படுத்தியமை உள்ளிட்ட தமிழ் மக்கள் அனுபவிக்கும் பல பிரச்சினைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன் வடக்கு, கிழக்கில் அதிகபட்ச அதிகார பகிர்வை கோரியதாக தெரிவித்த அவர், எதிர்காலத்தில் இது தொடர்பில் விரிவாக கலந்துரையாட முடியும் என ஜனாதிபதி கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார். 

அத்துடன்  சில இனவாத அறிக்கைகள் வாசிக்கப்பட்டதால், இனவாதத்தை இல்லாதொழிக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஒரு தேவையாகப் பயன்படுத்தினால் தவிர, அதைப் பயன்படுத்த விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4