பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு துப்பாக்கி தேவைதானா? (லங்கா4 ஊடகத்தின் பிரத்தியேக செய்தி)

#SriLanka #Parliament #Crime #Minister #Lanka4 #GunShoot #lanka4Media #lanka4.com #gun
Mayoorikka
3 months ago
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு துப்பாக்கி தேவைதானா? (லங்கா4 ஊடகத்தின் பிரத்தியேக செய்தி)

பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் இப்பொழுது புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்கள் அதிகமானோர் புதிய முகங்களாக இருக்கின்றது மாறுபட்ட கொள்கைகளோடு மக்களுக்கு ஒத்துப் போகின்ற மக்களுக்கு சார்பாக மக்கள் சேவையாக பாராளுமன்றம் முன்பை விட இப்பொழுது மாற்றப்பட்டிருப்பது நாங்கள் பார்க்கக் கூடியதாக இருக்கிறது.

 அங்கே சில மொட்டு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் அங்கம் வகிக்கிறார்கள் ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர்களும் அங்கம் வகிக்கிறார்கள் அதேபோல என் டி பி கட்சியிலிருந்து பலர் மிக மிக பலர் அதிகமான நல்ல கொள்கைகளோடு புதிய முகங்கள் அங்கு அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.

 இந்த நிலையில் தற்பொழுது பேசுபொருளாக மாரியாரிக்கும் விடையம் என்னவென்றால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படவுள்ள துப்பாக்கி விடையம். உண்மையில் அவர்களுடைய பாதுகாப்பிற்கு கொடுக்கப்படும் இந்த கலாச்சாரம் தேவையா என்பது ஒரு கேள்வியாக இருக்கிறது எதற்காக அவர்களுக்கு துப்பாக்கி? தங்களுடைய பாதுகாப்பிற்கு துப்பாக்கி வேண்டும் என கேட்டிருக்கின்றார்கள்.

 இது உண்மையா என்பது நாங்கள் பார்க்க வேண்டிய விடயம் அதாவது இந்த துப்பாக்கி அதாவது ஒருவர் தாக்க வருகின்ற பொழுது அதனால் இவர் தன்னை பாதுகாத்துக் கொள்ள முடியுமா என்பது ஒரு கேள்வி இருக்கின்றது. 

 நிச்சயமாக 90% இல்லை என்று தான் கூற வேண்டும் ஏதோ ஒரு வகையிலே தன்னுடைய அலுவலில் இருக்கின்ற ஒருவருக்கு தாக்க வருபவர் சொல்லிவிட்டு வருவது அல்ல திடீரென்று தாக்குவார். 

அப்பொழுது அவர் தன்னை பாதுகாத்துக் கொள்ள அந்த துப்பாக்கி ஒரு ஐந்து பத்து வீதங்கள் தான் அவரை பாதுகாத்துக் கொள்ள உதவும் என்பது நாங்கள் கண்கூடாக பார்க்கக்கூடிய ஒரு உண்மையாக இருக்கிறது.

 அந்த வகையில் இந்த துப்பாக்கியை ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் விரும்பி கேட்டுக் கொள்வது ஒரு கிக்குக்காக அல்லது அவர்களுடைய ஒரு பவருக்காக அல்லது பெருமைக்காகவே என பார்க்கக்கூடியதாக உள்ளது.

 அவருடைய பில்டப்புக்காக தான் இந்த துப்பாக்கியை பெற்றுக் கொள்கிறார்களே தவிர பாதுகாப்பு அல்ல அவர்களை சுற்றி பாதுகாவலர்கள் கொடுக்கப்பட்டிருக்கிறார்கள் அவர்கள் நிற்பார்கள் அவர்கள் பாதுகாத்துக் கொள்வார்கள் இவர் தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கு துப்பாக்கி வைத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை இந்த துப்பாக்கி கலாச்சாரமே இலங்கையில் இருக்கக் கூடாது என்பது இளைஞர்கள் மாத்திரம் அல்ல பெரியோர்கள் மாத்திரம் அல்ல எல்லோரும் விரும்புகின்ற ஒரு விடயமாக இருக்கிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!