தொடர் கைதுகள் : அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் ராமேஸ்வரம் மீனவர்கள்!

#India #SriLanka
Dhushanthini K
2 weeks ago
தொடர் கைதுகள் : அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் ராமேஸ்வரம் மீனவர்கள்!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

 இன்றும் (07) நாளையும் கடற்றொழில் நடவடிக்கைகளை தவிர்த்து இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக ராமேஸ்வரம் கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர். 

 கடல் எல்லையை அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் புதன்கிழமை கைது செய்ததே இந்த வேலை நிறுத்தத்திற்கு காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

தொடர் கைது நடவடிக்கைகளால் மீனவ சமூகம் வாழ்வாதாரத்தை மேற்கொள்ள முடியாத அவலநிலையில் உள்ளதாக ராமேஸ்வரம் கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!