அரிசி மற்றும் தேங்காய்க்கு தட்டுப்பாடு : சதொச வந்த வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றம்!

#SriLanka #Coconut
Thamilini
1 year ago
அரிசி மற்றும் தேங்காய்க்கு தட்டுப்பாடு : சதொச வந்த வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றம்!

போதிய அரிசி மற்றும் தேங்காய் இல்லாததால் சதொச விற்பனை நிலையத்திற்கு வந்த பல வாடிக்கையாளர்கள்  திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. 

 தற்போதைய தட்டுப்பாடு காரணமாக சந்தையில் தேங்காய் மற்றும் அரிசியின் விலைகள் வேகமாக அதிகரித்து வருவதால், அவற்றை சலுகை விலையில் விற்பனை செய்யும் வேலைத்திட்டத்தை சதொச நிறுவனம் ஆரம்பித்திருந்தது. 

அதன்படி சதொச கடைகளில் அரிசி மற்றும் தேங்காய்க்கு கடும் கிராக்கி ஏற்பட்டது. எனினும் இன்று சில சதொச கடைகளில் அரிசி மற்றும் தேங்காய் வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 இதேவேளை, இறக்குமதி செய்யப்பட்ட அரிசி இருப்புக்கள் அடுத்த வாரம் நாட்டிற்கு வரும் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4