யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் அர்ச்சுனா நுழைந்தால் துரத்தப்படுவார்! சத்தியமூர்த்தி எச்சரிக்கை

#SriLanka
Mayoorikka
1 year ago
யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் அர்ச்சுனா நுழைந்தால் துரத்தப்படுவார்! சத்தியமூர்த்தி எச்சரிக்கை

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீண்டும் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு குழப்பம் விளைவிக்க வருவாரெனின்,வாசலிலேயே வைத்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் அவர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுவார் என்று போதானா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்திதெரிவித்தார்.

 நேற்று இடம்பெற்றஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட் டார். யாழ். போதனா வைத்தியசாலைக்கு வருகைதந்த பாராளுமன்றஉறுப்பினர்` உறுப்பினர் அர்ச்சுனா, தான் தற்போது ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்றும்தன்னை சேர் என்று அழைக்குமாறும் கூறி எம்மோடு முரண்பட்டார்.

 அவரை சேர் என்று அழைக்க முடியாது என்று பதிலளித்ததற்கு, என்னை யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையின் பணிப்பாளர் பதவியில் இருந்து அகற்றுவேன் எனவும், பாராளுமன்றத்துக்கு அழைத்து கேள்வி கேட்பேன் என்றும் கூறினார். 

 அத்துடன் என்னை வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லுமாறும் கூறினார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் உள்நுழைந்து பாராளுமன்றஉறுப்பினர் அர்ச்சுனா குழப்பம் விளைவிப்பதற்கு இடமளிக்க முடியாது.

 மீண்டும் ஒருமுறை அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குகுழப்பம் விளைவிக்க முற்படுவராயின்வாசலிலேயே வைத்து தடுத்து நிறுத்தப்பட்டு, பாதுகாப்பு உத்தியோகத்தரால்பொலிஸாரிடம்ஒப்படைக்கப்படுவார் என சத்திய மூர்த்தி தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4