சுவிட்சர்லாந்தில் விசா இல்லாமல் வேலை செய்யும் நபர்களை காட்டிக் கொடுக்கும் கும்பல்

#Switzerland #Visa #Workers #illegal
Prasu
1 month ago
சுவிட்சர்லாந்தில் விசா இல்லாமல் வேலை செய்யும் நபர்களை காட்டிக் கொடுக்கும் கும்பல்

வணக்கம் நேயர்களே! Lanka4 ஊடகத்தின் ஊடாக ஒரு சிறப்பு செய்தியில் உங்களை காண்கின்றோம்.

சுவிற்சர்லாந்திலே விசா இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வேறு நாடுகளில் இருந்து அதாவது ரொமேனியா, போர்த்துக்கல் மற்றும் பல நாடுகளில் இருந்து சட்டத்திற்கு விரோதமாக சுவிற்சர்லாந்திற்கு வந்து சுவிற்சர்லாந்திலும் விசாக்கள் மறுக்கப்பட்டு பல வருடங்களாக மறைந்திருந்து சில இடங்களில் வேலை செய்துகொண்டிருக்கும் நபர்கள் தங்களது குடும்பத்தினரை தமது நாட்டில் விட்டுவிட்டு மிகவும் கஷ்டப்பட்டு சுவிற்சர்லாந்து நாட்டிலே சட்டவிரோதமாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

அதாவது விசா இன்றி அனுமதி இல்லாமல் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக சம்பளமாக வழங்கப்படும் பணத்திற்காக அவர்களை நிறுவனங்கள் ஒருநாளுக்கு 12 , 13 மணித்தியாலங்கள் வேலை வாங்குகிறார்கள்.

இவ்வாறு கஷ்டப்படும் நபர்களுக்கு மிக குறைந்த ஊதியமாக 50 - 100 சுவிஸ் பிராங்குகள் மட்டுமே வழங்கப்படுகிறது. அதையும் பொருட்படுத்தாமல் குறைவாக கிடைக்கும் ஊதியத்தில் மிச்சம் பிடித்து உணவு இன்றி உடைகள் இன்றி குளிர் , வெயில் மற்றும் பணியிலும் கஷ்டப்பட்டு உழைக்கும் அவர்களை காட்டி கொடுக்கும் கும்பல் ஒன்று சுவிற்சர்லாந்திலே உலாவிக்கொண்டிருக்கிறது.

அவர்கள் எதற்காக இத்தகைய செயலை செய்கிறார்கள் என்று தெரியவில்லை .அவர்கள் விசா இல்லாமல் வேலை செய்பவர்களை பொலிசாருக்கு காட்டிக்கொடுத்து கைது செய்கின்ற அளவுக்கு இந்த நடவடிக்கைகள் சென்றுள்ளது.

Lanka4 ஊடகத்தின் ஊடாக அறியக்கூடியதாக லூசெர்ன் மாநிலத்தில் ஒருவர் காட்டிக்கொடுக்கப்பட்டு அவரை பொலிசார் உணவு விடுதி ஒன்றில் கைது செய்துள்ளனர். மேலும் அவரை நாடு கடத்துகின்ற அளவிற்கு பொலிசார் ஆயத்தம் செய்யும் பொழுது அவர் தப்பி வேறு இடங்களில் மறைந்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற துன்பமான சம்பவத்தை நங்கள் அறியக்கூடியதாக உள்ளது.

இவ்வாறு கஷ்டத்துடன் விசா இன்றி வேலை செய்கிறவர்களை காட்டி கொடுக்கின்ற நபர்களிடம் தயவு செய்து விசா இன்றி அல்லது சட்டவிரோதமாக வேலை செய்பவர்கள் அவதானமாக இருக்குமாறு Lanka4 ஊடகம் கேட்டுக்கொள்கிறது.

நீங்கள் மறைந்திருந்து விசா இன்றி வேலை செய்வது சட்டத்திற்கு விரோதமாக இருந்தாலும் அந்த பிரச்சனைக்குள் நாங்கள் வர விரும்பவில்லை. இருந்தாலும் முடிந்தளவு பாதுகாப்பாக இருக்குமாறு Lanka4 ஊடகம் கேட்டுக்கொள்கிறது.

பலர் இங்கிருந்து இத்தகைய பிரச்சனைகளை சந்திக்கமுடியாமல் இத்தாலி நாட்டிற்கு சென்றவர்களும் உண்டு.அதேவேளையில் பிரான்ஸ் நாட்டிற்கும் சென்று அங்கேயும் விசா இன்றி கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

காரணம் இலங்கையில் சுமூகமான சூழல் இருப்பதனால் அதாவது அகதி அந்தஸ்துக்கள் மறுக்கப்படுகின்ற காரணத்தினால் இவர்கள் அனைவருக்கும் விசா மறுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

சுவிற்சர்லாந்து நாட்டிற்கோ அல்லது ஐரோப்பாவிற்கு வருகின்றவர்கள் தயவுசெய்து முன்னெச்சரிக்கையுடன் இங்குள்ள உறவினர்கள் அல்லது நண்பர்களிடம் தகவல்களை கேட்டறிந்த பிறகு பயணங்களை மேற்கொள்ளுமாறு Lanka4 ஊடகம் கேட்டுக்கொள்கிறது. நன்றி!

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!