தென்னிலங்கையில் பரபரப்பு : மனைவியின் கண் முன்னே சுட்டுக் கொல்லப்பட்ட கணவன்!

#SriLanka #GunShoot
Thamilini
1 year ago
தென்னிலங்கையில் பரபரப்பு : மனைவியின் கண் முன்னே சுட்டுக் கொல்லப்பட்ட கணவன்!

மீகொட, நாகஹவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றிரவு (14.12) காரில் பயணித்த ஒருவர், மெளசாவில் இனந்தெரியாத இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சகோதரரின் வீட்டில் இருந்து மீகொட நாகஹவத்த பிரதேசத்தில் உள்ள தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த போதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 

 இனந்தெரியாத நபர் ஒருவர் காரை நிறுத்தியதாகவும், மேலும் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலத்த காயமடைந்த நபர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூடு நடந்த போது, ​​இறந்தவரின் ஒன்றரை வயது மகளும் மனைவியும் காரில் இருந்தனர். 

 உயிரிழந்தவர் பத்தரமுல்லை செத்சிரிபாயவில் உள்ள சமுர்த்தி மானிய அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக கடமையாற்றி வந்தார். 

 நுகேகொட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர்கள் சம்பவ இடத்தில் சோதனை நடத்துகின்றனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், மெகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4