பண்டிகை காலத்தில் முட்டை விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

#SriLanka #Egg
Thamilini
1 year ago
பண்டிகை காலத்தில் முட்டை விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

எதிர்வரும் பண்டிகை காலத்திற்காக முட்டையொன்றை 30 ரூபா தொடக்கம் 35 ரூபா வரையான சில்லறை விலையில் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

சராசரியாக 50 கிராமுக்கு குறைவான எடையுள்ள முட்டை ஒன்று 30 ரூபாய் முதல் 32 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்குவதாக அந்த சங்கத்தின் தலைவர் அன்டன் அப்புஹாமி தெரிவித்தார்.

55 கிராமுக்கு மேல் உள்ள பெரிய முட்டையை 33 ரூபாய் முதல் 35 ரூபாய் வரையில் வாங்க முடியும் என்றும் அவர் கூறினார்.

இந்த விலையில் முட்டைகள் சந்தையில் கிடைப்பது சர்வசாதாரணமானது என்றும், அதற்கு மேல் முட்டைகளை வாங்க வேண்டாம் என்றும் அவர் நுகர்வோரை கேட்டுக்கொண்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4