இந்தியா சென்ற இலங்கை ஜனாதிபதியை வரவேற்ற மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

#India #SriLanka #Sri Lanka President #AnuraKumara
Prasu
1 month ago
இந்தியா சென்ற இலங்கை ஜனாதிபதியை வரவேற்ற மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிட்ட அனுர குமார திசாநாயக்க அமோக வெற்றி பெற்றார்.

இதையடுத்து, அவர் அதிபராக பதவியேற்றுக் கொண்டார். அனுர குமார திசாநாயக்க இலங்கை அதிபராக பதவியேற்ற சில நாட்களில் இலங்கை சென்ற இந்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர், இலங்கை அதிபரை இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார்.

அந்த அழைப்பை ஏற்று இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க இன்று 3 நாள் பயணமாக இந்தியா வருகை தந்துள்ளார்.

அனுர குமார திசாநாயக்க மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வரவேற்றார். இந்தியா வருகை தந்துள்ள அதிபர் அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோரை சந்திக்க உள்ளார். 

இந்தச் சந்திப்பின்போது இருநாடுகள் இடையே நிலவும் மீனவர்கள் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்தும், எதிர்கால திட்டங்கள் பற்றியும் ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இலங்கை அதிபரின் இந்திய வருகையின்போது புத்த கயா செல்ல உள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!