மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் கருத்துக்களை தெரிவிக்க மக்களுக்கு சந்தர்ப்பம்!

#SriLanka #Electricity Bill
Thamilini
1 year ago
மின் கட்டணத் திருத்தம்  தொடர்பில் கருத்துக்களை தெரிவிக்க மக்களுக்கு சந்தர்ப்பம்!

மின்சாரக் கட்டணத் திருத்தப் பிரேரணைக்கான பொதுமக்களின் கருத்துக்களைப் பெறும் நடவடிக்கை நாளை (17) முதல் ஆரம்பிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

 இதன்படி ஜனவரி 8ஆம் திகதி வரை இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. 

 இது தொடர்பான முன்மொழிவுகள் மின்சாரக் கட்டணங்கள், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, 6வது தளம், இலங்கை வங்கி வர்த்தகக் கோபுரம், கொழும்பு 03 என்ற முகவரிக்கும், info@pucsl.gov.lk என்ற மின்னஞ்சல் ஊடாகவும் பொதுமக்களின் ஆலோசனைக்கு அனுப்பப்படலாம்.

 076 42 710 30 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் நீங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் சமர்ப்பிக்கலாம். 

 பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மாகாண மட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு வரவோ அல்லது கருத்துக்களை சமர்ப்பிக்கவோ முடியும் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. 

 புத்தாண்டின் முதல் ஆறு மாதங்களுக்கு மின் கட்டணத்தை திருத்தம் செய்யாமல் பராமரிக்க வேண்டும் என மின்சார வாரியம் பரிந்துரைத்திருந்தது. 

 இதன்படி, குறித்த பிரேரணையை மீளாய்வுக்கு உட்படுத்துவதற்கு ஆணைக்குழு தீர்மானித்துள்ளதுடன், பிரேரணை அடங்கிய வரைவு பொதுமக்களின் கருத்துக்களுக்காகவும் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4