முன்னாள் ஜனாதிபதிக்கான பாதுகாப்பு எந்த அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது - பாராளுமன்றத்தில் கேள்வி!

#SriLanka #Parliament
Thamilini
1 year ago
முன்னாள் ஜனாதிபதிக்கான பாதுகாப்பு எந்த அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது - பாராளுமன்றத்தில் கேள்வி!

முன்னாள் ஜனாதிபதிகளான  மகிந்த ராஜபக்ச மற்றும்  ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு ஒரே அளவிலான பாதுகாப்பை வழங்குவது எந்த அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது என வி. சானக்க இன்று (17) பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். 

 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக கடமையாற்றியிருந்த முப்படைகளின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அனைவரையும் நீக்குவதற்கு தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில்  “இன்று  மகிந்த ராஜபக்சவின் முன்னாள் இராணுவ அதிகாரிகளை முழுமையாக நீக்கிவிட்டோம் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டதை பார்த்தேன். முப்படைகளும் முற்றாக அகற்றப்படுகின்றன.

60 பொலிஸ் உத்தியோகத்தர்களே எஞ்சியுள்ளனர். இவ்வாறு ஊடகங்களில் விஷேட செய்தி வெளியானதை பார்த்தேன். 

ஒரு கைதியை பிடிக்க அதிரடிப்படையின் இரண்டு வாகனங்கள் செல்கிறது ஆனால் நாட்டை காப்பாற்றிய தலைவரின் சிறப்பு அதிரடிப்படை அகற்றப்பட்டது எனத் தெரிவித்துள்ளார். 

 அங்கு இது தொடர்பில் பதில் அளித்த பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, அச்சுறுத்தல் மதிப்பீட்டின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பை கையாண்டதாக தெரிவித்தார். 

 "பாதுகாப்பு குறித்து போலீசார் ஆய்வு செய்தனர் எனஃவுடூம் 225 தொடர்பாகவும் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அதிகபட்சமாக, 60 போலீசார் பாதுகாப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆயுதப்படைகளை வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில், 11 1/2 மாதங்களாக 61 கோடி ரூபாய் நிதி அமைச்சகத்தின் தலையீட்டில் மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4